நிலக்கரி கிடங்கில் இயந்திரம் விழுந்து ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி கிடங்கில் இயந்திரம் விழுந்து ஒருவர் பலி

Added : ஜன 13, 2020

மீஞ்சூர்:தனியார் நிலக்கரி கையாளும் நிறுவனத்தில், இயந்திரம் உடைந்து விழுந்ததில், தொழிலாளி ஒருவர், அதில் சிக்கி இறந்தார்.
மீஞ்சூர் அடுத்த, கொரஞ்சூர், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ், 40. இவர், மீஞ்சூர் அடுத்த, காட்டுபள்ளி அருகே உள்ள, தனியார் நிலக்கரி கையாளும் நிறுவனத்தில், இயந்திர பிரிவில் வேலை பார்த்து வந்தார்.நேற்று அதிகாலை, வெல்டிங் செய்யும் பணியில் இருந்தபோது, திடீரென இயந்திரம் உடைந்து விழுந்தது.அதன் இடிபாடுகளில் சிக்கிய ரமேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், நான்கு வடமாநில தொழிலாளர்கள் காயம் அடைந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த ரமேஷின் உறவினர்கள், நிலக்கரி முனையம் சென்று, அங்கு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மீஞ்சூர் போலீசார் சமாதானம் செய்தனர். பின், இயந்திரத்தில் சிக்கியிருந்த, ரமேஷின் உடலை, நேற்று காலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X