சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்கறி வியாபாரி 'போக்சோ' சட்டத்தில் கைது

Added : ஜன 13, 2020
Advertisement

பழவேற்காடு:கடையில் வேலை பார்த்து வந்த, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, காய்கறி கடை வியாபாரியை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பழவேற்காடு பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். கடையின் உரிமையாளர், செந்தில்குமார், 38, என்பவர், சிறுமியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் தாய், செந்தில்குமாரிடம் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.அதை தொடர்ந்து, சிறுமியின் தாய், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X