பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன்கார்டு இல்லாதவர்களும் பொங்கல் தொகுப்பு பெறலாம்!

Added : ஜன 13, 2020
Advertisement

கோவை:ரேஷன் கார்டு இல்லாததால், பொங்கல் தொகுப்பு பெற முடியாதவர்கள், இன்று ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெறலாம்.கோவை மாவட்டம் முழுக்க உள்ள, 1,419 ரேஷன் கடைகள் வாயிலாக, 9 லட்சத்து, 70 ஆயிரத்து, 69 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி,கடந்த 9ம் தேதி முதல் துவங்கியது. கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த, பொங்கல் தொகுப்பு வினியோகம் இன்றுடன் முடிகிறது.ரேஷன் கார்டு தொலைந்து போனவர்கள்,குடும்ப தலைவரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப உறுப்பினரின் ஆதார், ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண், அதன் வாயிலாக பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல் ஆகியவற்றை, ரேஷன் கடையில் சமர்ப்பித்து பொங்கல் தொகுப்பை பெறலாம்.புகார் ஏதேனும் இருந்தால், கலெக்டர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை, 0422-2300569, மாவட்ட வழங்கல் அலுவலர், 94450 00245, நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளரை, 9443358874 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்று, கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X