சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் உட்பட இருவரை கத்தியால் குத்திய கும்பல் தப்பியது

Added : ஜன 13, 2020
Advertisement

கும்மிடிப்பூண்டி:பஜார் பகுதியில், ஒருவரை கத்தியால் குத்திய கும்பலை தடுக்க முயன்ற போலீசையும், அந்த கும்பல் கத்தியால் குத்தி தப்பிச் சென்றது.
கும்மிடிப்பூண்டி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 29. கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று காலை, வேலையில் இருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, ராஜேசை விரட்டி சென்று கத்தியால் குத்தியது. அங்கு, மப்டியில் இருந்த ரஞ்சித், 27, என்ற போலீசார், அந்த கும்பலை தடுக்க முயன்றார்.அப்போது, ரஞ்சித்தையும் கத்தியால் குத்திய அந்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது. பகல் நேரத்தில், கூட்ட நெரிசல் மிக்க பஜார் பகுதியில் நடந்த இந்த கத்தி குத்து சம்பவத்தால், கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இருவரும், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ராஜேஷுக்கும், கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முனுசாமி என்பவருக்கும் இடையே, கடந்த 8ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.ராஜேசை கொலை செய்ய முனுசாமி திட்டமிட்டதை அறிந்து, நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி போலீசில், தன் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ராஜேஷ் புகார் அளித்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முனுசாமி, மூன்று கூட்டாளிகளுடன் சென்று, ராஜேசை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. தலைமறைவான நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X