பொது செய்தி

தமிழ்நாடு

'வழக்குக்கு செல்லாமல் இருப்பதே வாழ்க்கை'

Added : ஜன 13, 2020
Advertisement
 'வழக்குக்கு செல்லாமல் இருப்பதே வாழ்க்கை'

அவிநாசி:'வழக்கு வரை போகாமல் இருப்பது தான் வாழ்க்கை ' என, தெரிவிக்கப்பட்டது.அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேய பக்தர் பேரவை சார்பில், நடந்து வரும் ஆன்மிக சொற்பொழிவில், சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது;ராமாயணம் என்பது, வாழ்க்கைக்கான கல்வி. ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை ராமாயணம் கற்றுக் கொடுக்கிறது.யாரையும் கஷ்டப்படுத்தி, எந்தவொரு தேவையையும் பூர்த்தி செய்யக் கூடாது; அது, மாபெரும் குற்றச்செயல்.ஒவ்வொருவரையும் பகவான் வழிநடத்துகிறார். எனவே, ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும். நல்லது நினைப்பவர்களுக்கு, நல்லதேநடக்கும்.நமக்கு வந்த துன்பம், பிறர்க்கு வந்துவிடக்கூடாது என, நினைக்க வேண்டும். வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.இல்வாழ்க்கையில் உள்ள பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். குடும்ப சண்டை, வீதிக்கு வந்துவிடக்கூடாது.வழக்குக்கு போகாமல் இருப்பது தான் வாழ்க்கை. இல்வாழ்க்கையில், எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோமோ, அதுவே மிகப்பெரிய தவம்.காட்டுக்கு சென்று தான், தவம் இருந்து, புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை.நம் கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது; பகவான் வழிநடத்துகிறார் என சொல்லும் போது, தான், அவரின் ரட்சிப்பு அதிகம் கிடைக்கும்.ராமாயணத்தில், சுந்தர காண்டத்தின் தத்துவத்தை உணர வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்தும் பல விஷயங்கள் அதில் உள்ளன. போலி பக்தி கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X