பொது செய்தி

தமிழ்நாடு

அமோம்! காரைக்குடி, திருப்பத்துாரில் நெல் விளைச்சல்....அறுவடை துவக்கினர் விவசாயிகள்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
அமோம்! காரைக்குடி, திருப்பத்துாரில் நெல் விளைச்சல்....அறுவடை துவக்கினர் விவசாயிகள்

திருப்புத்துார்:திருப்புத்துார் வட்டாரத்தில் 5 ஆண்டுக்கு பின்சாகுபடி பரப்பு அதிகரித்துநெல் விளைச்சல் அதிகரித்துள்ளன.
திருப்புத்துார் பகுதியில் கடந்த 10 ஆண்டுக்குமுன் 15 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடிசெய்தனர்.பின்னர் மழை குறைவாலும், ஆற்றில் நீர் வரத்து இன்றிசாகுபடி பரப்பு குறைந்தது.கடந்த ஆண்டு 3ஆயிரத்து500ஏக்கரில் சாகுபடி நடந்தும், விளைச்சல் இன்றி விவசாயிகள் அவதிப்பட்டனர்.இந்தாண்டு பெய்த மழையைநம்பி நெல் சாகுபடியை சற்றே தாமதமாக துவக்கினர். இதனால் சாகுபடி பரப்பு 7ஆயிரத்து 500 ஏக்கராக அதிகரித்துள்ளன.ஓரளவு மழையும் தொடர்ந்தது. ஆற்றில் நீர் வரத்தின்றி கண்மாய் மறுகால் செல்லாத நிலையிலும் பயிர்கள் விளைந்துள்ளது.
தற்போது அறுவடை துவங்கிவிட்டன. விவசாய ஊழியர்கள் பற்றாக்குறையால்நெல் அறுவடைஇயந்திரங்களை அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டனர். நெல்விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால், கூடுதலாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். விளைச்சலும் நன்றாக உள்ளன. இதுவரை 25 சதவீதம் அறுவடை செய்துவிட்டனர். விவசாய ஊழியர்கள் பற்றாக்குறையை தவிர்க்க மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரம் பயன்படுத்தலாம், என்றார்
.காரைக்குடி: காரைக்குடி அருகே திருவேலங்குடியில் 10 எக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து, அறுவடை பணியை துவக்கிவிட்டனர். இப்பகுதியில் நல்ல மழை பெய்ததால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, நடவு செய்திருந்தனர். நல்ல விளைச்சல் கிடைத்து தற்போது அறுவடை பணி நடக்கிறது. அறுவடை செய்த நெல்லை களத்தில் கொட்டி உலர்த்தும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி, வரவிருக்கும் தை பொங்கலுக்கு சூரியபகவானுக்கு நன்றி செலுத்த காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X