தமிழ்நாடு

கெளம்பீட்டாங்க, ஊருக்கு! பொங்கல் லீவு விட்டாச்சு: பனியன் தொழிலாளர் குஷி

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 கெளம்பீட்டாங்க, ஊருக்கு! பொங்கல் லீவு விட்டாச்சு: பனியன் தொழிலாளர் குஷி

திருப்பூர்:பொங்கல் கொண்டாட் டங்களுக்காக, திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு இன்று முதல் விடுமுறை அளித்துள்ளன.தமிழர்களின் கொண்டாட்டங்களில், பொங்கல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கோவில், வீடுகளில் பொங்கல் வைப்பது, விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்பதில் அனைவரும் ஆர்வம்காட்டுகின்றனர்.நாளை, போகியுடன் பொங்கல் பண்டிகை துவங்குகிறது; நாளை மறுநாள் பொங்கல்; 16ம் தேதி மாட்டுப்பொங்கல்; 17ல் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் நிறுவனங்களில், மதுரை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி என, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் பணிபுரிகின்றனர்.
சொந்த ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்துவந்து, வாடகை வீடு, ரூம்களில், தனியாகவும் குடும்பத்தினருடனும் வசிக்கும் இந்த தொழிலளர்களின் பெரும்பான்மையினர், சொந்த ஊர் சென்று உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொங்கலுக்கு, நீண்ட நாள் தொழிலாளர் விடுப்பு எடுத்துவிடுகின்றனர்; அதனால், இந்த வாரத்துக்கான சம்பளம், நேற்று முன்தினம் பட்டுவாடா செய்யப்படவில்லை. அவசர ஆர்டர்களை முடிக்கவேண்டிய நிலையால், வார விடுமுறை தினமான நேற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கின.நேற்று மதியம் முதல் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டது; தொழிலாளர் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, இன்று முதல் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான ஆடை உற்பத்தி நிறுவனங்களில், 60 சதவீத அளவில், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற வடமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர். இந்த தொழிலாளர், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வது இல்லை.வடமாநில தொழிலாளர் அதிகமுள்ள நிறுவனங்கள், பொங்கல் பண்டிகை முடிந்த உடனேயே, 18ம் தேதி முதல், அந்த தொழிலாளரைக்கொண்டு ஆடை தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.பொங்குமா வர்த்தகம்!

ஒவ்வொரு ஆண்டும், பொங்கலுக்குப்பின், ஆடை வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி பெறுகிறது. தொழில் துறையினரின் தொடர் கோரிக்கையால், மத்திய அரசு, நிலுவையில் உள்ள ஏற்றுமதிச் சலுகைகளை விரைவில் விடுவிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. அதனால், பொங்கல் பண்டிகைக்குப்பின் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவு ஆர்டர் கிடைக்கும்; தொழிலாளர் வருகையும் சிறப்பாக இருக்கும் என்பது, பின்னலாடை துறையினரின் கணிப்பாக உள்ளது.பஸ், ரயில்கள் 'ஹவுஸ்புல்'

பொங்கலையொட்டி, திருப்பூரில் இருந்து சென்னை, சேலம், கோவைக்கு பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கு வசதிக்காக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சந்திப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதிகளில் பாதசாரிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு வசதியாக ரோட்டோரம் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கலுக்கு பின் பும் சேலம், மதுரை, திருச்சி, தேனி. திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என்றனர். ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X