பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளின் ஆர்வப் 'பொங்கல்': திறமையை நிரூபிக்க குவிந்தனர்

Added : ஜன 13, 2020
Advertisement
 குழந்தைகளின் ஆர்வப் 'பொங்கல்': திறமையை நிரூபிக்க குவிந்தனர்

திருப்பூர்:திருப்பூரில், ஐந்து இடங்களில் நடந்த கலை இலக்கிய திறனாய்வு போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்தினர்.பள்ளி மாணவ, மாணவியருக்கான கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன.ராமசாமி முத்தம்மாள் மண்டபம், சுப்பராயக்கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபம், தங்கவேலு திருமண மண்டபம், லட்சுமிமஹால், அம்மன் திருமண மண்டபம் என, ஐந்து மையங்களில் நடந்த கலை இலக்கிய போட்டிகளில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்அதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. ஆறு முதல் -10ம் வகுப்பு வரை; பிளஸ் 1 முதல் அதற்கு மேல் படிப்பவர்களுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன.குறிப்பிட்ட தலைப்பு அளிக்கப்பட்டு, அதில் விரும்பிய தலைப்புகளில் படைப்பு தர வாய்ப்பு அளிக்கப்பட்டது.திருப்பூர், சுப்பராயக்கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடந்த போட்டியை, வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் துவக்கி வைத்தார்.பிற பகுதிகளில், வரவேற்பு குழு தலைவர் மோகன்கார்த்திக், பெம் பள்ளி சரண்யா, ஜீவானந்தம், ஊராட்சி தலைவர்கள் கணேசன், சாந்தாமணி, டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் உட்பட பலர் துவக்கி வைத்தனர்.போட்டியில் வென்றவர்களுக்கு, பிப்., 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு, கே.ஆர்.சி., சிட்டி சென்டர் புத்தக கண்காட்சி வளாகத்தில் பரிசுகள் வழங்கப்படவும் உள்ளது.பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில், 17வது புத்தக திருவிழா, திருப்பூரில் வரும் 30 முதல் பிப்., 9 வரை நடக்கிறது. இதையொட்டி, இந்த போட்டிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X