இளைஞர் தின வாகன பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் தின வாகன பேரணி

Added : ஜன 13, 2020
 இளைஞர் தின வாகன பேரணி

திருப்பூர்:சுவாமி விவேகானந்தரின், 157 வது பிறந்த தினத்தையொட்டி, இந்து இளைஞர் முன்னணி சார்பில், தேசிய இளைஞர் தினவிழா திருப்பூர் பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கொண்டாடினர்.விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.தொடர்ந்து, மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில், மாநகர செயலாளர் சுரேந்திரன் முன்னிலையில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற டூவீலர் வாகன பேரணி நடந்தது. குமார் நகரில் துவங்கி, காலேஜ் ரோட்டில் நிறைவு பெற்றது.விழிப்புணர்வுகுடியுரிமை சட்டத்தை ஆதரித்து, இந்து முன்னணி சார்பில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேவுகன் தலைமையில், மாவட்ட துணை தலைவர் சசிகுமார், நகர தலைவர் கோபி ஆகியோர் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர். ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X