பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சி விற்பனை 'விறுவிறு'

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:நேற்று மட்டன், சிக்கன் கடைகளில் விற்பனை அதிகரித்தது. வழக்கமாக, 150 முதல், 180 ரூபாய் விற்கப்படும் சிக்கன் நேற்று கிலோ, 190 முதல், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மட்டன் விலை கிலோ, 540 முதல், 580 ரூபாய் என்ற நிலையிலே தொடர்ந்தது. இருப்பினும், இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திடீர் விலை உயர்வால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்தனர்.கடலோர மாவட்டங்களில் இருந்து, 40 டன் மீன் விற்பனைக்காக திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக கிலோ, 160 முதல், 170 ரூபாய்க்கு விற்கப்படும் மத்தி நேற்று கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனையானது.அயிலை கிலோ, 220. சங்கரா, 260, பாறை, 350, விலா, 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வஞ்சிரம் கிலோவுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 800 ரூபாய்க்கும், வரத்து குறைவால் இறால், நண்டு, 600 ரூபாய் வரையும்விற்பனையானது. மீன் வரத்து வழக்கம்போல் இருந்த போதும், ஞாயிற்றுக்கிழமைக்கான, 40 சதவீத விற்பனை மட்டுமே நேற்று நடந்ததாக, மீன் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X