ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தர்ணா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தர்ணா

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020

சிவகங்கை: ஐந்து மற்றும் 8ம் வகுப்பு அரசு பொது தேர்வு ரத்து, தேசிய கல்வி கொள்கை வரைவை திரும்ப பெற வலியுறுத்தி சிவகங்கையில் ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மாவட்டதலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட துணை செயலாளர் ரவி, ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் அமலசேவியர், மாலா, மாவட்ட பொருளாளர் குமரேசன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர், மாநில செயலாளர் முருகேசன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X