மாநில சதுரங்கம் 36 வீரர்கள் தேர்வு

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பூர்:மாநில போட்டியில் பங்கேற்பதற்காக, சதுரங்க வீரர்கள் 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாநில அளவிலான சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டி, வரும் ஜூன் 1ல் துவங்கி 5ம் தேதி வரை நடைபெற உள்ளன.மாநில போட்டியில் திருப்பூர் மாவட்டம் சார்பில் பங்கேற்பதற்கான சதுரங்க வீரர்கள் தேர்வு போட்டி, காமாட்சியம்மன் மண்டபத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் மனைவி சந்திரிகா போட்டிகளை துவக்கிவைத்தார் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிவன், உதவி செயலாளர் மனோகரன், பொருளாளர் ராஜேஸ் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளைச்சேர்ந்த மாணவ, மாணவியர்; ஆண், பெண்கள் 215 பேர் பங்கேற்றனர். 7 வயது, 9, 11, 13, 15, 17, 19, 25 வயதுக்கு உட்பட்டோர்; ஓபன் என, இருபாலருக்கும் தனித்தனியே ஒன்பது பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக காய் நகர்த்திய, இரண்டு பேர் வீதம், மொத்தம் 36 பேர் மாநில போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X