பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்நுட்ப அறிவு மேம்படுத்த நிட்டிங் போர்மேனுக்கு அறிவுரை

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் அடல் இன்குபேஷன் மையத்தில், நிட்டிங் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம், மூன்று நாட்கள் நடந்தது.பயிற்சியாளர்கள் சரவணகுமார், சமயதுரை, சங்கர் கிருஷ்ணா, இன்குபேஷன் மைய முதன்மை நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி ஆகியோர், அதிநவீன நிட்டிங் மெஷின்களை கையாளும் நுட்பம்; ஊசி பயன்பாடு, உற்பத்தி மேலாண்மை குறித்து, நிட்டிங் நிறுவன போர்மேன்களுக்கு பயிற்சி அளித்தனர்.கருத்தரங்கில் கூறப்பட்டதாவது:திருப்பூர் நிட்டிங் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான போர்மேன்கள், அனுபவ அடிப்படையிலேயே செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.குறிப்பிட்ட வகை துணியை உருவாக்குவது குறித்த எல்லாவகை விவரங்களையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும். தாங்கள் உருவாக்கிய டிசைன் குறித்த தொழில்நுட்ப விவரங்களை ஆவணப்படுத்திவைக்கவேண்டும்.எதிர்காலத்தில், அத்தகைய டிசைன்களை உருவாக்கவேண்டிவரும்போது, மிக எளிதாக துணி உற்பத்தி செய்யமுடியும்.இவ்வாறு, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X