'போதை' தந்தை மயக்கம் 2 வயது குழந்தை தவிப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பூர்:இரண்டு வயது குழந்தை ரோட்டில் தவிக்கவிட்டு விட்டு, தந்தையோ போதையில் 'மட்டை'யானார். போலீஸ்காரர், குழந்தையை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தார்.திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரர் ராமகிருஷ்ணன், நேற்றுமுன்தினம் மதியம், அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குமார் நகர் பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே ரோட்டோரம், இரண்டு வயது ஆண் குழந்தையுடன் ஒருவர் நடந்து சென்ற போது, மயங்கி கீழே விழுந்தார்.இதை பார்த்த ராமகிருஷ்ணன் ஓடி சென்று பார்த்தார். அந்த நபர், மதுபோதையில் மயங்கி கீழே விழுந்தது தெரிந்தது. குழந்தையும் ஆழ ஆரம்பித்தது. அந்த நபருக்கு தண்ணீர் கொடுத்து போதையை தெளிய வைத்து விசாரித்தார்.அதில், தெக்கலுார் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்; டிரைவராக வேலை பார்க்கிறார் என்பது தெரிய வந்தது. குழந்தையை பார்க்க சொல்லி, மனைவி வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், கணவரோ, குழந்தையை துாக்கிக் கொண்டு, திருப்பூர் வந்ததோடு, மது அருந்தியுள்ளார்.அவரது மனைவிக்கு மொபைல் போனில் தகவல் அளிக்கப்பட்டது. மனைவியிடம், குழந்தை ஒப்படைக்கப்பட்டது. கணவருக்கு அறிவுரை கூறி போலீசார், அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு, தாயிடம் குழந்தையை ஒப்படைத்த ராமகிருஷ்ணனை பலரும் பாராட்டினர்.'பேக்' ஒப்படைத்த போலீஸ்தெற்கு போலீஸ் தனபால், ஆயுதப்படை போலீஸ் அர்ஜூனா குமார் ஆகியோர் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, போயம்பாளையத்தில் ரோட்டில் கிடந்த'பேக்'கை எடுத்து பார்த்தனர். அதில், இரு மொபைல் போன்கள் இருந்தன. உரியவர்களுக்கு அழைத்த போலீசார், மொபைல் போன்களை ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X