திருப்பூர், திருச்சூர் அணிகள் அபாரம்: டி.எஸ்.சி., சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் துவக்கம்

Added : ஜன 13, 2020
Advertisement
 திருப்பூர், திருச்சூர் அணிகள் அபாரம்: டி.எஸ்.சி., சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் துவக்கம்

திருப்பூர்:திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, தென்மாநில அளவிலான டி.எஸ்.சி., சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி முருகம்பாளையம் ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கியது.போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்திரன் நேற்றைய போட்டிகளை துவக்கி வைத்தனர்.'ஏ' மற்றும் 'பி' பிரிவில் தலா நான்கு அணிகள் வீதம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. நாளை (14ம் தேதி) வரை 'ஏ' பிரிவு அணிகளுக்கு லீக் போட்டி நடக்கிறது. 15 முதல் 17ம் தேதி வரை 'பி' பிரிவு அணிகளுக்கு லீக் போட்டி நடக்கிறது. 18ம் தேதி அரையிறுதி போட்டியும், 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியும் நடக்கிறது.டி.எஸ்.சி., திருப்பூர் - சி.ஜி., மைசூரு அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடந்தது. டி.எஸ்.சி., அணி, 30 ஓவர் முடிவில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 156 ரன் எடுத்தது. அருண்குமார், நான்கு பவுண்டரிகளுடன், 35 ரன் எடுத்தார்.இலக்கை விரட்டிய சி.ஜி., மைசூரு அணி, 30 ஓவர் முடிவில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 106 ரன் எடுத்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில், டி.எஸ்.சி., அணி வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன் அருண்குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.மதியம் நடந்த மற்றொரு போட்டியில்,புதுச்சேரி சுப்புஸ் கிரிக்கெட் அகாடமி - திருச்சூர் அதிரையா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி அணி, 28.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 119 ரன் எடுத்தது. திருச்சூர் அணி பவுலர் அதுல்சஞ்சய், 20 ரன் கொடுத்து, மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.எளிய இலக்கை விரட்டிய, திருச்சூர் அணி, 23.2 ஓவரில், ஒருவிக்கெட்டை மட்டும் இழந்து, 120 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியின் பேட்ஸ்மேன் டேவிட்சாஜிதாமஸ் அரைசதம் (51 ரன்) கடந்தார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X