பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை - ராமேஸ்வரம் இடையே சாதாரண பஸ்கள் குறைப்பு

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திருப்புவனம்:மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அரசு போக்குவரத்து கழகம் குறைத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
சுற்றுலா தளமான ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் செல்கின்றனர். ராமேஸ்வரத்திற்கு மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம், மானாமதுரை வழியாக அனைத்து பஸ்களும் செல்கின்றன. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட நகரங்களில் பைபாஸ் ரோடு அமைத்துள்ளனர். பெரும்பாலான பஸ்கள் திருப்புவனம், திருப்பாச்சேத்திக்குள் வருவதில்லை. இந்த வழித்தடத்தில் சாதாரண பஸ்கள் 30 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்பட்டு வந்தன.
தற்போது அதை ஒரு மணி நேரமாக அதிகரித்துவிட்டனர். மேலும் இடைநில்லா பஸ் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, முக்கிய நகரில் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால்,பிற நகரங்களில் பஸ்கள் நிற்காமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து பயணிகள் கூறியதாவது: மதுரை - கமுதி, பரமக்குடி செல்லும் பஸ்கள் மட்டுமே அனைத்து நகரங்களிலும் நின்று செல்கின்றன. மற்ற பஸ்களில் முதுகுளத்துார் உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்ற மறுக்கின்றனர். இதனால் சிரமம் ஏற்படுகிறது. சாதாரண பஸ்களையும் இயக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X