பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டன் சந்தையில் பின்னி எடுக்கலாம்: 'பிரெக்சிட்' நிறைவேறுகிறது

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் வெளியேற உள்ளதால், பிரிட்டன் சந்தையை வசப்படும் திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களின் கனவு நனவாக வாய்ப்பு உள்ளது.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்காக, பிரிட்டனில், கடந்த 2016 ல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது; மக்கள் 51.89 சதவீதம் பேர், பிரிவுக்கு ஆதரவு அளித்தனர்.
ஆனாலும்,எம்.பி.,க்கள் ஆதரவு இல்லாததால், முன்னாள் பிரதமர் தெரசா மே, பிரதமர் போரிஸ்ஜான்சன் கொண்டுவந்த மசோதாவை பார்லிமென்ட்டில் நிறைவேற்ற முடியாமல் போனது. பிரெக்சிட் (பிரிட்டன் எக்ஸிட்)தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்தது.திருப்பூர் உட்பட நமது நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து, பிரிட்டனுக்கு அதிகளவு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. ஐரோப்பாவிலிருந்து விலகினால், பிரிட்டன் - இந்தியா இடையே சுலபமாக வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளமுடியும்.இறக்குமதி வரிவிலக்கை பயன்படுத்தி, பிரிட்டன் சந்தைக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என, கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்திய ஆயத்த ஆடை துறையினர் காத்திருக்கின்றனர்.பிரெக்சிட்டில் ஏற்பட்டு வந்த பின்னடைவுகள், ஆயத்த ஆடை துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியது.கடந்த டிசம்பர் 12ல், பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. மொத்த முள்ள 650ல், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றியை கைப்பற்றியது; போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிவிட்டார்.தேர்தலுக்குப்பின் பிரிட்டனில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்நாட்டு பணமாகிய பவுண்ட் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு, உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் விரைவில் விலகிவிடும் என்கிற நம்பிக்கையை, இந்திய ஏற்றுமதியாளரிடையே துளிர்விடச் செய்துள்ளது.இதை உறுதிப்படுத்தும்வகையில் தற்போது, பிரிட்டன் நாட்டு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரெக்சிட் மசோதாவுக்கு, மொத்தமுள்ள 330 எம்.பி.,க் களில், 231 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
முதல்முறையாக, பிரெக்சிட்டுக்கு, பெரும்பான்மை எம்.பி.,க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.இந்த மசோதா விரைவில் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் (மேல் சபை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சபை, மசோதா மீதான முடிவை காலதாமதம் செய்ய வாய்ப்பு உள்ளது.ஆனாலும், ஹவுஸ் ஆப் காமண்ஸ் எனப்படும் பொதுசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முடிவை மாற்ற முடியாது என்கின்றனர்.
வரும் 31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் வெளியேறும் என தெரிகிறது. குழப்ப நிலைகள் நீங்கி, பிரெக்சிட் நிறைவேறுவது உறுதியாகியுள்ளது, நமது நாட்டு ஆடைஏற்றுமதியாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.பிரிட்டன் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்திவரும் சீனா, வங்கதேசம், துருக்கி உட்பட போட்டி நாடுகளை எதிர்கொண்டு, வர்த்தகத்தை விரிவாக்கும் காலம் விரைவில் கைகூடும் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X