பொது செய்தி

தமிழ்நாடு

'இசை அமுதம்' நாளை முதல் பொழிகிறது! ஷண்முகானந்த சங்கீத சபா ஏற்பாடு

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பூர்:ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 17வது ஆண்டு இசை நிகழ்ச்சி, திருப்பூரில், நாளை கோலாகலமாக துவங்குகிறது.திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில் ஆண்டுதோறும், இசை அமுதம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 17ம் ஆண்டு நிகழ்ச்சியாக 'இசை அமுதம் - 2020', நாளை( 14ம் தேதி) துவங்கி 18ல், முடிகிறது.
திருப்பூர், வாலிபாளையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், தினமும், மாலை, 5:00 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும்.நாளை மாலை 5:00 மணிக்கு சந்தியா சங்கர் சாய்கிருஷ்ணா நாட்டியப் பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 6:30 மணிக்கு, கொல்கத்தா, மொஹல்முகர்ஜி, சிவமல்லாரி நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.வரும் 15ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, திருப்பூர் ரிதம் இசைப்பள்ளி மாணவர்கள் வழங்கும் வளரும் கலைஞர் இசை நிகழ்ச்சி; மாலை, 6:30 மணிக்கு, லால்குடி கிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி குழுவினர் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.வரும் 16ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு, சென்னை மாப்பிள்ளை கணேஷ் குழுவினரின் 'ஆவி வந்த மாப்பிள்ளை' தலைப்பில் நகைச்சுவை நாடகம் நடக்கிறது.
வரும், 17ல், மாலை, 5:00 மணிக்கு, சுப்புலட்சுமி மற்றும் சுபாஷ்சுதாகரனின் 'ஸ்வரவானி கலாலயா' பள்ளி சார்பில் மாணவர்கள் வழங்கும் இசை நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு, உமையாள்புரம் சிவராமன் மற்றும் பரத்சுந்தர் வழங்கும் 'ப்யூஷன்' இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.வரும், 18ல், மாலை, 6:30 மணிக்கு, சென்னை எஸ்.பி., கிரியேஷன்ஸ் குழுவினரின் 'பாரதியார் வரலாற்று நாடகம்' நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X