பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வாக்காளராக 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Added : ஜன 13, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில், புதிய வாக்காளராக, 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம் ஜன., 4 மற்றும் 5 ம் தேதி முதல் கட்டமாக நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினமும், நேற்றும் இரண்டாம் கட்ட முகாம் நடந்தது.அதிகபட்சமாக அவிநாசி தாலுகாவில், 7,023 வாக்காளர்கள் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பூர் தெற்கு தொகுதியில், 3,839 பேர் வாக்காளர்களாக பெயர் சேர்த்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுாகாவில், நான்கு முகாம்கள் மூலம், 45 ஆயிரத்து, 180 பேர் வாக்காளர்களாக விண்ணப்பித்துள்ளனர்.பெயர் நீக்கல் விண்ணப்பத்திலும் அவிநாசி முதலிடம் பெற்றுள்ளது. இத்தொகுதியில், 558 பேர் பெயர் நீக்க விண்ணப்பித்துள்ளனர். தாராபுரம் தொகுதியில், 146 பேர் பெயர் நீக்க விண்ணப்பித்துள்ளனர்.மாவட்டத்தில் மொத்தம், 2,683 பேர் பெயர் நீக்கத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு மாவட்டத்தில், 8,473 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்குமாவட்டம் முழுவதும் எட்டு தாலுகாவில், 56 ஆயிரத்து, 336 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X