பொது செய்தி

தமிழ்நாடு

ஏழைகளுக்கு இலவச மருத்துவம்: ஐ.எம்.ஏ., திட்டம்

Added : ஜன 13, 2020
Advertisement
 ஏழைகளுக்கு இலவச மருத்துவம்: ஐ.எம்.ஏ., திட்டம்

திருப்பூர்:ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பொங்கல் விழா, புதிய நிர்வாகிகள் தேர்வு, முந்தைய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல் ஆகிய முப்பெரும் விழா, கணியாம்பூண்டி இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் ராஜா தலைமை வகித்தார்.திருப்பூர் கிளை பொரு ளாளர் ரமேஷ் வரவேற்றார். செயலாளர் ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். போலீஸ் துணை கமிஷனர் பத்ரிநாராயணன், ஐ.எம்.ஏ., சங்க மாநில செயலாளர் ரவிக்குமார், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் கார்த்திகேயன், மேற்கு மண்டல துணைத் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி பேசினார். முன்னாள் தலைவர் செந்தில்குமரன் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். நடப்பு ஆண்டின் புதிய தலைவராக, சரண் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி, செயலாளராக பல்லடம் ராஜேஸ்வரி மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார், பொருளாளராக வேலன் மருத்துவமனை டாக்டர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். திருப்பூர் மாவட்ட நீதிபதி அல்லி சிறப்பாக செயல்பட்ட டாக்டர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.நீதிபதி அல்லி பேசுகையில், 'கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை சமுதாயத்துக்கு பயன்படுத்தினால் மட்டுமே அதை வளர்ச்சியாகவும், வெற்றியாகவும், முன்னேற்றமாகவும் கருத முடியும். அவ்வகையில் திருப்பூர் ஐ.எம்.ஏ., சமுதாய பணிகளை செய்து வருகிறது,' என்றார்.ஐ.எம்.ஏ., புதிய தலைவர் பழனிசாமி பேசுகையில், 'ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ திட்டம் துவங்கப்படும். மார்ப்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மருத்துவ பரிசோதனை குழு செயல்படும். பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண், காது, மூக்கு தொண்டை பரிசோதனை இலவசமாக செய்யப்படும்,' என்றார்.ஐ.எம்.ஏ., மாநில தலைவர் ராஜா பேசுகையில்,' ஐ.எம்.ஏ., சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரோட்டரியுடன் இணைந்து ரத்த வங்கி திட்டத்தை துவங்க உள்ளோம். மேற்கு மண்டலத்தில் மூன்று இடங்களில் ரத்த வங்கி திறக்கப்பட்டுள்ளது,' என்றார். சங்க துணை செயலாளர் பொம்முசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X