ஒரு போன் போதுமே

Added : ஜன 13, 2020
Advertisement
ஒரு போன் போதுமே

குண்டும்குழியுமான ரோடுதிண்டுக்கல் தொழிற்பேட்டை பகுதியில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. ரோட்டை செப்பனிட ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.- தீபக், திண்டுக்கல்.
ஏர்ஹார்ன்களால் தொந்தரவு
திண்டுக்கல்லில் தனியார் பஸ்களில் அதிக ஒலிஎழுப்பும் ஏர்ஹார்ன்களை பயன்படுத்துவதால் நோயாளிகள், வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவற்றை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முகில், காமாட்சிபுரம்.
தெருநாய்கள் தொந்தரவு
திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு சுற்றித்திரியும் நாய்களால் மக்கள் அச்சப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நாகேந்திரன், திண்டுக்கல்.
ஆக்கிரமிப்பால் அவதி
திண்டுக்கல் பென்சனர் வீதியில் இரண்டு, நான்குசக்கரவாகனங்களை கண்டபடி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சக்திவேல், திண்டுக்கல்.
தெருவிளக்கு எரியவில்லை
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் பகுதியில் பல மாதங்களாக நான்கு மின்கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இருள்சூழும் வேளைகளில் பெண்கள், குழந்தைகள் நடமாட அச்சப்படுகின்றனர். சமூகவிரோதிகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலாஜி, திண்டுக்கல்.
தேங்கிய குப்பை
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குருநாதநாயக்கன்புரம் ஊராட்சி கருத்தபட்டி காலனியில் வீடுகளின் முன்பாகவே குப்பை கொட்டுகின்றனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் துர்நாற்றம், கொசுத்தொல்லை, சுகாதார கேடு அடைகின்றனர். ஊராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வீரதாஸ், குருநாதநாயக்கன்புரம்.கழிவுகளால் சுகாதாரக்கேடு
அம்மையநாயக்கனூர் அருகே நாகையகவுண்டன்பட்டியில், திடக்கழிவு மேலாண்மைக்காக கழிவுகள் சேகரிப்பதில் அலட்சியம் உள்ளது. தெருக்களில் கழிவுகளை குவித்து, எரிக்கின்றனர். துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--எம்.மணிராஜ், நாகையகவுண்டன்பட்டி.
வேகத்தடையால் பாதிப்பு
செம்பட்டி - -மதுரை ரோட்டில், ஜம்புதுரைக்கோட்டையில் உயரமான வேகத்தடை உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பாதிப்படைகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--பி.ஜெயராஜ், ஜம்புதுரைக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X