சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளத்தில் 7,000 டன் நெல் மகசூல் : விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜன 13, 2020
Advertisement
 மடத்துக்குளத்தில் 7,000 டன் நெல் மகசூல் : விவசாயிகள் எதிர்பார்ப்பு

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் தை மாதம் நெல் அறுவடை தொடங்குகிறது. உத்தேசமாக 7,000 டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதிகளில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில், சம்பா பருவ நெல் சாகுபடி தொடங்கியது. 2,500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடந்தது.
மூன்று மாதங்கள் கடந்து, தற்போது பயிர்கள் வளர்ந்து, கதிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.மடத்துகுளத்துக்கு அருகில் உள்ள கல்லாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சில தினங்களுக்கு முன்பு அறுவடை தொடங்கியது. இந்த அறுவடையில், 30 முதல் 42 மூட்டைகள் வரை மகசூல் கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.ஒரு மூட்டையின் எடை 60 கிலோ ஆகும். இதனடிப்படையில் ஒரு ஏக்கருக்கு உத்தேசமாக, 2,400 முதல் 2,500 கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'உரிய பருவத்தில் சாகுபடி செய்து, நோய் பாதிப்பு எதுவும் இன்றி பாசனமும் பராமரிப்பும் செய்தால், ஒரு ஏக்கருக்கு 60 மூட்டைகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், பருவ மழை தாமதமாக பெய்ததால், சாகுபடிக்கும் சில வாரம் தாமதமாக தொடங்கியது. இதனாலும், சில இடங்களில் நோய்த்தாக்குதல் ஏற்பட்டதாலும் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தற்போது ஒரு ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் கிடைக்கலாம்',என்றனர்.மடத்துக்குளம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2,500 ஏக்கர் பரப்பில் அறுவடை நடக்கும் போது, உத்தேசமாக, 6,000 டன் முதல், 7,000 டன் வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் தொடங்கும் அறுவடையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X