பொது செய்தி

தமிழ்நாடு

குழிகள், மண் குவியலால் விபத்து சின்னாளபட்டியில் நீடிக்கும் அவலம்

Added : ஜன 13, 2020
Advertisement

சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் ரோட்டோர குழிகள், மண்குவியல்கள் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
சின்னாளபட்டியில், சில மாதங்களுக்கு முன் பெரும்பாலான தெருக்களில் ரோடு சீரமைப்பு பணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பஸ் ஸ்டாண்ட் ரோடு, மேல்நிலைப்பள்ளி ரோடு, செம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட்டது. தனியார் ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.அகலம் குறுகிய ரோடுகளில், புதிதாக பல உயரமான வேகத்தடைகள் அமைத்துள்ளனர்.ரோட்டோர பகுதிகள் மழைநீரால் அரிக்கப்பட்டு, பல இடங்களில் குழிகளாக மாறியுள்ளன.
மேல்நிலைப்பள்ளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், கனரக வாகனங்களின் போக்குவரத்து மட்டுமின்றி பள்ளி நேரங்களில் மாணவர்களின் வாகனங்களும் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படு கிறது. இரவு நேரங்களில், மண் குவியல்களால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இப்பிரச்னையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X