பொது செய்தி

தமிழ்நாடு

சீனிவாச பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் கோலாகலம்

Added : ஜன 13, 2020
Advertisement
 சீனிவாச பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் கோலாகலம்

உடுமலை:உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், தெப்போற்சவம் கோலாகலமாக நடந்தது.உடுமலை, பெரிய கடை வீதி சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது.பகல்பத்து உற்சவத்தில், மச்சாவதாரம், கூர்மாவதாரம், ஹயக்கிரீவ அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமனவதாரம், பரசுராமவதாரம், கோதண்டராமர் அவதாரம், பலராமவதாரம், கிருஷ்ணாவதாரம் மற்றும் மோகினி அலங்காரம் நிறைவடைந்தது.கடந்த 6ம் தேதி வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு உற்சவம் நடந்தது. தொடர்ந்து, ராப்பத்து உற்சவத்தில், தன்வந்திரி, திரிவிக்கிரமன், மகாவிஷ்ணு, பாண்டுரங்கன் அவதாரங்களில் சிறப்பு அலங்காரம் நேற்று வரை நடந்தது. தினமும், மாலை, 6:00 முதல் 8:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள், சிறப்பு அலங்காரத்துடன், சயனகோலத்தில், தெப்போற்சவ நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு, பெருமாளை வழிபட்டனர். திருவாய்மொழி, எட்டாம் பத்து பாசுர சேவையுடன், இன்று நவநீதகிருஷ்ணன் அலங்கார பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X