பொது செய்தி

தமிழ்நாடு

பாதையை மறித்த கடைகள்: பக்தர்கள் அவதி

Added : ஜன 13, 2020
Advertisement

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் மற்றும் பழநிக்கு செல்லும் வழியில் உள்ள பாதயாத்திரை பாதையை மறித்து கடைகள் போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இதற்காக, திண்டுக்கல்லில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் செல்வதற்கு என தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் அருகே குழந்தைவேலப்பர் கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி, பழநிக்கு செல்லும் வழியில் உள்ள பல இடங்களில் பாதயாத்திரை பாதையின் குறுக்கே மறித்து கடைகள் அமைத்துள்ளனர். நாற்கலிகளை போட்டு வைத்துள்ளனர்.
இதனால் பக்தர்கள் கடை எது, பாதை எது என பிரித்தறிய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பக்தர்களை குறிவைத்து இவ்வாறு பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை உடனே நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும். மேலும் பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு, தண்ணீர் கிடைக்கும் வகையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X