பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜன 13, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குறிஞ்சேரியிலுள்ள ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மார்கழி மாத திருப்பாவை பாசுர சேவை நாள்தோறும் நடக்கிறது. கூடாரை வெல்லும் திருப்பாவை பாசுர தினத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்றுமுன்தினம், காலையில், பூமி லட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, ரங்கமன்னார் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணத்துக்கு, நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.நேற்று, அதிகாலையில் கோ பூஜையுடன் திருக்கல்யாண சடங்குகள் துவங்கின. காலை, 8:00 மணிக்கு பக்தர்கள், விநாயகர் கோவிலிலிருந்து, ஆண்டாள் நாச்சியார் கோவிலுக்கு திருமண சீர் எடுத்து வந்தனர்.உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. காலை, 11:00 மணி முதல், திருக்கல்யாண உற்சவம் வேத மந்திரங்கள் முழங்க துவங்கியது. புண்ணியாகவாசம், காப்புக்கட்டுதல், காசிக்குச்செல்லுதல், சுவாமிகளுக்கு பூணுால் அணிதல் உள்ளிட்ட திருமண நிகழ்வுகள் நடந்தன.சுவாமிகளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின் திருமாங்கல்ய தாரணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து, பூப்பந்து விளையாட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X