பொது செய்தி

தமிழ்நாடு

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைந்து செயல்பட 'அட்வைஸ்'

Added : ஜன 13, 2020
Advertisement

உடுமலை:பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க, அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.நடப்பாண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான நடவடிக்கைகள் குறித்து, திருப்பூரில், வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது.இதில், திருத்தப்பணிகள் குறித்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கருணாகரன், அலுவலர்களுக்கு, அறிவுறுத்தினார்.அதில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய வேண்டிய படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும். பெறப்படும் படிவங்களின் பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, கள ஆய்வு மேற்கொண்டு உரிய காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும்.வாக்காளர் பட்டியலில் நீக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தை முழுமையாக ஆய்வு செய்யவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும், பிழை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X