பொது செய்தி

தமிழ்நாடு

தரமில்லாத விதை விற்பனை செய்வோருக்கு எச்சரிக்கை!விதிமுறைகளை காட்டும் விதைச்சான்று துறை

Added : ஜன 13, 2020
Advertisement

உடுமலை:சின்னவெங்காயம் உட்பட சாகுபடிக்கு, தரமற்ற விதை விற்பனை செய்பவர்கள் மீது, புகார் அடிப்படையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விதைச்சான்றுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், மக்காச்சோளம், நெல், கொத்தமல்லி உட்பட சாகுபடியில், அறுவடை பணிகள் துவங்கியுள்ளன; வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், காய்கறி சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
விதை விற்பனை காய்கறி, மக்காச்சோளம் உட்பட அனைத்து சாகுபடிகளுக்கும், தனியார் விற்பனை நிலையங்களிலேயே விவசாயிகள், விதைகளை, வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில், சில நேரங்களில், முளைப்புத்திறன் குறைந்த மற்றும் இதர குறைபாடுகள் உள்ள தரமில்லாத விதையால், ஒட்டுமொத்த சாகுபடியும் பாதிக்கப்படுகிறது.கடந்த சீசனில், சின்னவெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்ததால், அதற்கான நாற்றங்கால் அமைக்க, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், தரமில்லாத விதை விற்பனையால், விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, விதைச்சான்றுத்துறையினரும், கள ஆய்வு பணிகளை துவக்கியுள்ளனர்.அதன்படி, தரமில்லாத விதைகள் விற்கும், விற்பனையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்துறையினர் எச்சரித்துள்ளனர்.விதைச்சான்று துறையினர் கூறியதாவது: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 143 விதை மற்றும் நாற்று விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில், நீர் இருப்பை பொறுத்து, ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பு சீசனில், சின்னவெங்காயம் சாகுபடிக்கான நாற்றங்கால் அதிகளவு அமைக்கப்படுகிறது. இதற்காக, விதை விற்பனை நிலையங்களில், 10க்கும் மேற்பட்ட தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களின், வெங்காய விதைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.விதை ஆய்வாளர் மூலம் இவ்விதைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விற்பனையாளர்கள், விதை ரகங்களுக்கு, குவியல் எண் வாரியாக முளைப்புத்திறன் அறிக்கை கண்டிப்பாக பெற்ற பின்னரே, விற்பனையை துவக்க வேண்டும்.கொள்முதல் செய்யும் விதைகளை, குவியல் எண் வாரியாக இருப்பு பதிவேட்டில், முறையாக பதிவு செய்ய வேண்டும்.விதை விற்பனை செய்யும் போது, விற்பனை பட்டியலில், விதை பெயர், ரகம், குவியல் எண்; காலாவதி நாளை சரியாக குறிப்பிட்டு, விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று விதை விற்பனை செய்வது அவசியமாகும்.
விதை பாக்கெட்டிலுள்ள, சில்லரை விற்பனைக்கு மேல், விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளும், உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம், விதை வாங்க வேண்டும்; வாங்கும்போது, விற்பனை பட்டியலோடு, விதை காலாவதி நாள் உட்பட விபரங்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். விதை விற்பனை தொடர்பான, புகார்கள் இருந்தால், கோவை விதை ஆய்வு துணை இயக்குனருக்கோ, அல்லது வட்டார விதை ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கலாம். இதன்படி, சம்பந்தப்பட்ட விதை விற்பனை நிலையங்களில், ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விதைச்சான்றுத்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X