பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் இலக்கு: தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Added : ஜன 13, 2020
Advertisement

உடுமலை:நடப்பு கல்வியாண்டிலும், தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் மட்டுமே இலக்காக இருக்க வேண்டும் என, திருப்பூர் மாவட்டத்தில் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட கல்வியை தவிர்த்து, பாடங்களை புரிந்துகொண்டு, அடிப்படைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், பாடத்திட்டங்கள் முதல் தேர்வு வரை பல்வேறு மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், தற்போது தேர்ச்சி சதவீதம் பள்ளிகளின் இலக்காக மாறியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் முன்னிலை பெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. நடப்பு கல்வியாண்டில், மீண்டும் பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்களால் மாணவர்கள் அரையாண்டுத்தேர்வுகளை எதிர்கொள்வதே கடினமானதாக இருந்தது. இதனால், பொதுத்தேர்வு குறித்து, ஆசிரியர்களும் அச்சமடைந்துள்ளனர்.அரையாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட அளவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில், இம்முறையும், பொதுத்தேர்வின் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் மட்டுமே இலக்காக இருக்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மாணவர்கள், நன்றாக புரிந்துகொள்ளும் வரை, பாடங்களுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து எழுத்துப்பயிற்சி அளிக்க வேண்டும் என, கல்வித்துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை மூன்று பிரிவுகளில் பிரித்து, அவர்களுக்கான பாடத்திட்டங்களை ஆசிரியர்களே வழங்கி, சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சி வழங்குகின்றனர்.ஒவ்வொரு திருப்புதல் தேர்வையும், பொதுத்தேர்வாகக்கொண்டு மாணவர்களை தயார்படுத்துவதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், பெற்றோருக்கும் சிறப்பு கூட்டங்கள் நடத்தி, மாணவர்களின் கல்விநிலை மற்றும் தேர்வுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு குறித்து அறிவுரை வழங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X