கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க அமைப்பு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க அமைப்பு கூட்டம்

Added : ஜன 13, 2020
Share

உடுமலை:கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க அமைப்புக்கூட்டம் உடுமலையில் நடந்தது.கூட்டத்துக்கு, கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க முன்னாள் கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் சின்னதுரை வரவேற்றார். கூட்டத்தில், கால்நடைத்துறையில், பணியாற்றும், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், 'டி' பிரிவில் இருந்து, 'சி' பிரிவு ஊழியர்களாக மாற்றம் பெற்று பல ஆண்டுகளாகிறது; இருப்பினும், 'டி' பிரிவு பணிகளையே தொடர்ந்து செய்ய கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.பகல் மற்றும் இரவு காவல் பணியாற்ற உத்தரவிடுவதை தவிர்க்க வேண்டும் உட்பட கோரிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவராக பாலசுப்பிரமணியன், மாநில பொது செயலாளராக ஜெயபால், பொருளாளராக சிவக்குமார், மகளிர் அணி செயலாளராக செல்வி உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X