பொது செய்தி

தமிழ்நாடு

இளைய சமுதாயத்தை உருவாக்கும் அகக்கல்வி! வேள்வி நிறைவு விழாவில் பரஞ்ஜோதியார் பேச்சு

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 இளைய சமுதாயத்தை உருவாக்கும் அகக்கல்வி! வேள்வி நிறைவு விழாவில் பரஞ்ஜோதியார் பேச்சு

உடுமலை:''இளைய சமுதாயம், தன்னிலை உணரும், அகக்கல்வியை கற்பித்து, திறன்மிகு சமுதாயத்தை, உருவாக்கினால், பிற தேசங்களுக்கு வழிகாட்டும் மையமாக இந்தியா உருவாகும்,'' என பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழாவில், குருமகான் பரஞ்ஜோதியார் பேசினார்.உடுமலை அருகே திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 30 வது பிரபஞ்ச நல, மகாதவ வேள்வி நிறைவு விழா நேற்று நடந்தது.
உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர் சுப்பிரமணியன் வரவேற்றார்.தி சென்னை சில்க்ஸ் இயக்குனர் விநாயகம் தலைமை வகித்தார். விழாவில், குருமகான் பரஞ்ஜோதியார் பேசியதாவது: மாணவர்களுக்கு, தற்போது, புலன்வழி கல்வி மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால், முன்பு, தங்களை தாங்களே உணருதல் என்ற உயரிய நோக்கம் கொண்ட அகக்கல்வி யோகமாக பாரதத்தில், குருக்களால் கற்பிக்கப்பட்டது.இவ்வாறு, உடல், மனம், அறிவு என அனைத்திலும் சிறப்பு பெற்ற, திறன் பெற்றவர்கள் உருவாக்கப்பட்டார்கள். இதை வைத்தே, நுாறு இளைஞர்களை கொடுங்கள்; தேசத்தை உயர்த்தி காண்பிக்கிறேன் என விவேகானந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.மீண்டும், அத்தகைய திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கினால், நமது தேசம் பிற தேசங்களுக்கு வழிகாட்டும் மையமாக மாறும். தனி ஒருவரின் நல்ல எண்ணம், சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கும். தன்னிலையை உணர்ந்து, தெய்வீகத்தை அடைவதே அனைத்து மார்க்கங்களும் நமக்கும் காண்பிக்கும் வழியாகும்.
கேள்விகளுக்கான பதில்களை, விஞ்ஞானம் புறத்தில் தேடுகிறது; பதில்களை மனதுக்குள் தேட வைப்பது மெய்ஞானமாகும். சிற்றின்பங்களை புறம் தள்ளி, முக்திக்கான வழியை தேட வேண்டும்.இனி வரும் காலங்களில், விவசாயம் செழிக்கும்; பசிப்பிணி இல்லாத உலகம் படைக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படும். இந்த நோக்கங்களை நிறைவேற்ற, நல்லெண்ணம் கொண்ட, திறன் மிகு சமுதாயம் நம் நாட்டில் ஆன்மிக பாதையால் கண்டெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார். உலக அமைதிக்காக ஒரு நிமிட அமைதி காக்கப்பட்டு, அஷ்ட தீபங்கள் ஏற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X