எச்சரிக்கை! திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறை...குட்கா, பிளாஸ்டிக் விற்றால் உரிமம் ரத்து | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எச்சரிக்கை! திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறை...குட்கா, பிளாஸ்டிக் விற்றால் உரிமம் ரத்து

Added : ஜன 13, 2020

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் பிளாஸ்டிக் விற்றால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. இருப்பினும் குட்கா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார், உணவு பாதுகாப்பு துறையினர் தடுமாறி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் தடையை மீறி குட்கா விற்பனை தாராளமாக நடக்கிறது.பதினெட்டு வயதிற்கு கீழுள்ளவர்களுக்கு, பள்ளி, கல்லுாரிக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருந்தும் திண்டுக்கல்லில் சில கடைகளில் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து குட்கா விற்பனை கட்டுப்பாடின்றி நடக்கிறது. கடைகளில் குட்கா விற்பது தெரிந்தால் அவற்றை பறிமுதல் செய்து, விற்பனையாளருக்கு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கும் நிலை இருந்தது.உரிமம் ரத்து:தற்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் உடனே அபராதம் விதிக்க, மீண்டும் மீண்டும் அதே தவறில் ஈடுபட்டால் உரிமத்தை ரத்து செய்ய உணவு பாதுகாப்பு துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குட்கா விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.5 ஆயிரம், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் விற்றால் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அபராதம் செலுத்த தவறினாலும் உரிமம் ரத்து செய்யப்படும். இந்த கட்டுப்பாடு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பை பயன்பாட்டிற்கும் பொருந்தும்.
நியமன அலுவலர் நடராஜன் கூறுகையில்,' அபராதம் விதிக்க, உரிமம் ரத்து செய்ய அனுமதி கிடைத்திருப்பதால் குட்கா விற்பனையை முழுவதுமாக தடுக்க முடியும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 100 கடைகளில் ஆய்வு நடத்தியதில் 11 கடைகளில் இருந்து 30 கிலோ குட்கா, பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது',என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X