பள்ளியில் பொங்கல் விழா மாணவர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் பொங்கல் விழா மாணவர்கள் அசத்தல்

Added : ஜன 13, 2020
Share
 பள்ளியில் பொங்கல் விழா மாணவர்கள் அசத்தல்

உடுமலை:உடுமலை, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளோடு நடந்தது.விழாவில், ஆர்.கே.ஆர்., கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், விழாவை துவக்கி வைத்தார். உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிச்சாமி பொங்கல் திருநாள் குறித்து பேசினார்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, கரகாட்டம், பறையாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், உறியடித்தல், பம்பரம் விடுதல், கயிறு இழுத்தல், ரங்கராட்டினம், செங்கல் நடை விளையாட்டு, சைக்கிள் மெது ஓட்டம், சாக்கு ஓட்டம், கும்மியடித்தல் பூப்பறிக்க வருதல் உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தன.பள்ளியில், பழங்கால பொருட்கள், நாணயங்கள் மற்றும் தற்காப்பு ஆயுதங்கள் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் மாலா நன்றி தெரிவித்தார். விழாவுக்கு ஏற்பாடு செய்த, ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X