பொது செய்தி

தமிழ்நாடு

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை பிப்.29 க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
வேலை இல்லாதவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பெறாதோர், பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்று தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளியை பொறுத்தவரை பதிவுசெய்து ஓராண்டு பூர்த்தியாயிருக்க வேண்டும்.ஆதிதிராவிடர், பழங்குடியினர் வயது 45 க்குள், இதர வகுப்பினர் 40 க்குள், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தமிழகத்திலேயே கல்வி முடித்தவராக இருக்க வேண்டும். வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும். அரசு உட்பட எவ்வித வகைகளில் நிதி உதவியும் பெற்றிருக்கூடாது. பள்ளி, கல்லுாரி சென்று படிப்பவராக இருக்க கூடாது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவருக்கு மாதந்தோறும் ரூ.200, தேர்ச்சி பெற்றவர் ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.600, பிளஸ் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும். தகுதியுடையவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பிப்.29 க்குள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருவோர் ஓராண்டு முடித்திருந்தால் தொடர்ந்து பெற சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X