பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் தொட்டில் குழந்தை திட்டத்தில் '103': தத்தெடுக்க என்ன வழி

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தொட்டில் குழந்தை திட்டத்தில் இதுவரை 103 குழந்தைகள் பெறப்பட்டுள்ளனர்.
பெண் குழந்தை கொலையை ஒழிக்கும் நோக்கத்தில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறந்தவுடன் பெற்றோரால் கைவிடப்படும் பெண் சிசுக்கள் அரசாங்கத்தால் வளர்க்கப்படுகிறார்கள். இதற்காக குழந்தை வரவேற்பு மையம், ஆரம்ப சுகாதார நிலையம், சமூக நல அலுவலகத்தில் தொட்டில் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 103 குழந்தைகள் பெறப்பட்டு உள்ளனர். அவர்கள் பள்ளியில் படித்து வருகின் றனர்.
திருமணமான குழந்தை இல்லாத தம்பதிகள், காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க விரும்பினால் சமூகநலத்துறை மூலம் பதிவு செய்ய வேண்டும். விசாரணையின் அடிப்படையில் தத்து கொடுக்கப்படுகிறது.குழந்தை தேவைப்படுவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தம்பதியின் திருமணம், தம்பதியினர் வயது சான்று அவசியம். தம்பதியரில் யாருக்கேனும் வயது 45 க்கு மேல் இருந்தால் தத்தெடுக்க தகுதியில்லை. இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை எனபதற்கான மருத்துவ சான்று, வருமான சான்று, 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.குழந்தையை தத்தெடுக்கும் தாய், தந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் அதன் பிறகு, 'குழந்தையை பொறுப்பு எடுத்து வளர்க்க நாங்கள் தயார்' என, வேறு ஒரு தம்பிதியினர் வாக்குறுதி கொடுக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் குழந்தை தத்து கொடுக்கப்படும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X