பொது செய்தி

தமிழ்நாடு

மண் வளத்தை பாதிக்கும் குப்பை பிரச்னை : மக்கள் பிரதிநிதிகளிடம் கிடைக்குமா தீர்வு?

Added : ஜன 13, 2020
Advertisement

உடுமலை:வாய்க்கால் கரையில், குப்பைகள் கொட்டும் பிரச்னைக்கு புதிதாக பொறுப்பேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம், போடிபட்டி, கணக்கம்பாளையம் உட்பட ஊராட்சி எல்லை வழியாக பி.ஏ.பி., உடுமலை கால்வாய் செல்கிறது. பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமான இக்கால்வாய் கரையில், அருகிலுள்ள குடியிருப்பு மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர்.இதனால், மக்கும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளும், பாசன நீரில் அடித்து செல்லப்பட்டு, விளைநிலங்களில் தேங்குகிறது. நீர் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி, மண் வளத்தையும் பாதிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், எவ்வித தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை. குறிப்பிட்ட துாரம், கால்வாய் கரையில், வேலி அமைக்கும் பொதுப்பணித்துறை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது குறித்து, கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்திலும், ஊராட்சி செயலாளர்களிடமும் பல முறை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தற்போது, உள்ளாட்சி தேர்தல் முடிந்து, உடுமலை ஒன்றிய குழு மற்றும் ஊராட்சிகளுக்கு புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ள நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X