பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் சொட்டு மருந்து முகாம் ஜன.19 ல் 1,313 இடங்களில் நடக்கிறது

Added : ஜன 13, 2020
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஆயிரத்து 313 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்கைளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஜன.19 ல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 192 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உட்பட ஆயிரத்து 313 இடங்களில் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும்.மேலும் 29 நடமாடும் சொட்டு மருந்து முகாம் மற்றும் 50 போக்குவரத்து மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த பணியில் 5 ஆயிரத்து 232 பணியாளர்கள் ஈடுபட உள்ள னர். குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கி குழந்தைகளின் நலனை பாதுகாக்க வேண்டும்.கலெக்டர் விஜயலட்சுமி கூறியது: சொட்டு மருந்து முகாம் குறித்து முன்னெச்சரிக்கை செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் பெற்றோர்களுக்கு போலியோ குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும். முகாம்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி செய்ய அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், போலியோ நோய் இல்லாத எதிர்கால இந்தியாவை உருவாக்க பெற்றோர்கள் பங்கு அவசியம் என, கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X