பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் சிறு கடன்

Added : ஜன 13, 2020
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் செயல்படும் சிறு கடன் திட்டத்தில் எந்த பாதுகாப்பும் இன்றி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிறு, குறு வியாபாரிகள், காய்கறி, பழங்கள், பூ, பெட்டி கடை, தள்ளுவண்டியில் தொழில் செய்து வரும் வியாபாரிகள் பயன்பெறலாம்.இதே போல் பெண் சுய தொழில் முனைவோர் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த தொழில் மையங்கள் அமைக்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்த கடனை 60 மாத தவணையில் திரும்ப செலுத்த வேண்டும்.வேலை செய்யும் பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இதனை 36 மாத தவணையில் திரும்ப செலுத்த வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தாய்மை கால கடன் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும். மேலும் மத்திய அரசின் 'கிசான்' கடன் அட்டை திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X