பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தரின் அறிவுரையை பின்பற்றுங்கள்: இளைஞர்களுக்கு அழைப்பு

Added : ஜன 13, 2020
Advertisement
 விவேகானந்தரின் அறிவுரையை பின்பற்றுங்கள்: இளைஞர்களுக்கு அழைப்பு

பந்தலுார்:'இளைஞர்கள் விவேகானந்தரின் நெறி முறைகளை பின்பற்றினால் வளமான சமுதாயம் உருவாகும்,' என, தெரிவிக்கப்பட்டது.பந்தலுார் விவேகானந்தா இளைஞர் மன்றம் சார்பில், விவேகானந்தரின் ஜெயந்தி தின விழா நடத்தப்பட்டது. தலைவர் சுரேஷ் வரவேற்றார். நிர்வாகி தீபக்ராம் தலைமை வகித்தார். விவேகானந்தரின் திருவுருவ படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.முன்னிலை வகித்த, பந்தலுார் நுாலகர் அறிவழகன் பேசுகையில், ''விவேகானந்தர் இளைஞர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.
விவேகானந்தரின் -பொன்மொழிகள், இளைஞர்களுக்கும் போதனையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாகரிகம் மற்றும் கலாசார வளர்ச்சி காரணமாக, தவறான வழிகளில் பயணிக்கும் நிலையில், சமுதாயம் சீர்கேடு அடைந்து வருகிறது. விவேகானந்தரின் பொன்மொழிகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்தால், வளமான மற்றும் நலமான சமுதாயத்தை உருவாக்க இயலும்,'' என்றார்.தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், மன்ற நிர்வாகிகள் ஆட்டோ, ஜீப் ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X