பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் எஸ்.ஐ., எழுத்து தேர்வில் ஆயிரத்து 86 பேர் 'ஆப்சென்ட்'

Added : ஜன 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் எஸ்.ஐ., எழுத்துத்தேர்வை 3 ஆயிரத்து 103 பேர் எழுதினர். 1086பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் 2019 ஆண்டிற்கான எழுத்துத்தேர்வு ஜன.12,13 ல் நடக்கிறது. நேற்று (ஜன.12) பொதுப்பிரிவினருக்கு காலை 10:00 மணிக்கு துவங்கி பகல் 12:30 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது. நீலம், கருப்பு பந்துமுனை பேனா, நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டது. அலைபேசி, கால்குலேட்டருக்கு அனுமதியில்லை. முன்னதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், எஸ்.பி., சக்திவேல் தேர்வு மையத்தை ஆய்வு செய்தனர்.தேர்வுக்கு 691 பெண்கள் உட்பட மொத்தம் 4 ஆயிரத்து 189 விண்ணப்பித்தனர். அதில் 3 ஆயிரத்து 103 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 086 பேர் ஆப்சென்ட் ஆகினர். இன்று (ஜன.13) துறை ஒதுக்கீட்டினருக்கு காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் காலை 8:00 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். காலை 10:15 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X