பொது செய்தி

தமிழ்நாடு

வாக்களர் பட்டியல் திருத்தம்; சிறப்பு முகாமில் மக்கள் ஆர்வம்

Added : ஜன 13, 2020
Advertisement
 வாக்களர் பட்டியல் திருத்தம்;  சிறப்பு முகாமில் மக்கள் ஆர்வம்

பந்தலுார்:வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்டது.ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்து கொண்டனர்.பந்தலுார் சுற்றுப்புற ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களை பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். முகாமில் காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X