ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டளிப்பதன் அவசியம் விழிப்புணர்வு பேரணி

Added : ஜன 13, 2020

மஞ்சூர்:மஞ்சூரில் வாக்காளர் பட்டியலில், இடம் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.குந்தா வருவாய்த்துறை சார்பில், வாக்காளர்கள் மத்தியில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணி நடந்தது. மஞ்சூர் பஜாரில் துவங்கிய பேரணியை, தாசில்தார் சரவணன் துவக்கி வைத்தார்.இதில், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும்; தேர்தல்களில் ஜனநாயக கடமையாற்றும் வகையில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார், நாட்டுநலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார், எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கவுசல்யா, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், ராஜன், தினேஷ்குமார், சவுந்தரராஜன் உட்பட 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X