சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநியில் 'ரோப்கார்' சேவை பாதிப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

பழநி:ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் நான்கு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி மலைக்கோயிலுக்கு வழக்கமாக சனி,ஞாயிறு தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்ற னர். தற்போது சபரிமலை சீசன் என்பதாலும், பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பதாலும், நேற்று ஞாயிறு விடுமுறையில் மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் பால்குடங்கள், காவடி எடுத்து வந்தனர்.வின்ச் ஸ்டேஷனில் வரிசையில் காத்திருந்தனர்.
மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் நான்கு மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். 'ரோப்கார்' சேவை காற்றினால் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வின்ச், படிப்பாதை வழியாக மலைக் கோயில் சென்றனர். மாலை தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X