பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தருடன் பயணித்த குட்வின் கல்லறையில் பிரார்த்தனை

Added : ஜன 13, 2020
Advertisement

ஊட்டி:சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளர் ஜோஸ்வா குட்வின் பணிகளை, நினைவுபடுத்தும் விதமாக, ஊட்டி தாமஸ் தேவாலயத்தில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் அமைதி பிரார்த்தனை நடத்தப்பட்டது.ஊட்டியில் நுாற்றாண்டு பழமையான தாமஸ் தேவாலயத்தில், சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜோஸ்வா குட்வின் கல்லறை உள்ளது.கடந்த, 20 ஆண்டுகளாக 'மானஸ்' அமைப்பு சார்பில், விவேகானந்தர் பிறந்தநாள் அன்று, நன்றியின் வெளிப்பாடாக, இந்த கல்லறையை துாய்மைபடுத்தி, அமைதி பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. விவேகானந்தர் பிறந்த நாளான நேற்று, ஜோஸ்வா குட்வின் கல்லறையில், பிரார்த்தனை நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, தாமஸ் தேவாலய ரெவரென்ட் இமானுவேல் வேழவேந்தன் பேசுகையில், ''சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகளை, அர்த்தம் மாறாமல் பதிவு செய்து உலக மக்கள் கற்று உணர, அவரின் வாழ்வோடு பயணித்த குட்வினின் பணிகள் உலக சகோதரத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இவர் மறைந்தாலும், அன்பால் செய்து வந்த இவரின், பணி நிலைத்திருப்பதற்கு தன்னலமற்ற சேவையே முக்கிய காரணம்,'' என்றார்.ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ராகவேஷானந்தா சுவாமி விவேகானந்தா பேசுகையில், ''இந்த ஆண்டு, 150வது பிறந்த தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில், சர்வமத கருத்தரங்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், 'மானஸ்' அமைப்பினர், சிறுவர், சிறுமியர், மற்றும் தாமஸ் தேவாலய பொறுப்பாளர்கள் பங்குபெற்றனர். ஏற்பாடுகளை மானஸ் ஆன்மிக அமைப்பு நிறுவனர் சிவதாஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X