பொது செய்தி

தமிழ்நாடு

கோவை-ராமேஸ்வரம் ரயில் நிரந்தரமாக இயக்கப்படுமா

Added : ஜன 13, 2020
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல், பழநி வழியாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என, வர்த்தகர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை கூட்டநெரிசலை தவிர்க்க, தென்னக ரயில்வே சார்பில், ஜன.14, 16 ல் கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரம் வரையும், மறுமார்க்கத்தில் ஜன.15, 17 ல் ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே கோவை-மதுரை, திருச்செந்துார்-பாலக்காடு பயணிகள் ரயில் தினமும் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது
.பஸ்சை விட மிகக்குறைந்த கட்டணம் என்பதால் தைப்பூசவிழா, பொங்கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு, ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. நிற்ககூட இடமின்றி முதியவர்கள், பெண்கள் குழந்தைகளுடன் சிரமப்படுகின்றனர். அதனால் கோவை-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக்கி, பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும். இதற்கு திண்டுக்கல் எம்.பி., அமைச்சர், கலெக்டர் முயற்சி எடுக்க வேண்டும் என, வர்த்தகர்கள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X