பொது செய்தி

தமிழ்நாடு

இறந்த இளைஞரின் உடலை வாங்க மறுப்பு : பழங்குடியின கிராமத்தில் பரபரப்பு

Added : ஜன 13, 2020
Advertisement
 இறந்த இளைஞரின் உடலை வாங்க மறுப்பு : பழங்குடியின கிராமத்தில் பரபரப்பு

கூடலுார்:கூடலுாரில் இறந்த இளைஞரின் உடலை பழங்குடியின மக்கள் வாங்க மறுத்ததால், 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கூடலுார் தேவர்சோலை கவுடங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 23. திருட்டு புகார் தொடர்பான விசாரணைக்காக, 9ம் தேதி தேவர்சோலை எஸ்.ஐ., பைக்கில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லும் போது, வழியில் குதித்து ஓடிவிட்டார். 10ம் தேதி காலை தேவன்2 பகுதியில், விஷம் குடித்து இறந்து கிடந்தார்.உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நேற்று முன்தினம், கூடலுார் போலீஸ் ஸ்டேஷன், முன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், நேற்று, ஊட்டியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம், பிற்பகல், கவுடங்கொல்லிக்கு இளைஞரின் உடலை எடுத்து வந்தனர். கிராம மக்கள் உடலை இறக்க மறுத்தனர். டி.எஸ்.பி., ஜெயசிங், தலைமையில் சமாதான முயற்சியை ஏற்கவில்லை. 'மரணம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், தாயாருக்கு பென்ஷன், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, மக்கள் அங்கு வந்த ஆர்.டி.ஓ., ராஜ்குமாரிடம், மக்கள் தெரிவித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாலை, 5:45 மணிக்கு உடலை பெற்றுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X