அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பேரம் தோல்வி: தி.மு.க.,வுக்கு கிடைத்தது வாய்ப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

குன்னுார்:குன்னுார் பேரட்டி ஊராட்சியில், அ.தி.மு.க., பேரம் தோல்வியடைந்ததால், தி.மு.க., ஆதரவு பெற்ற உறுப்பினர் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.குன்னுார் பேரட்டியில், 9 வார்டுகளில், முறையே கிருஷ்ணன், சுப்ரமணி, சுதா, அருள்ராஜ், சுகுணா, சங்கீதா, சிசிலி குமாரி, சாந்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். சங்கீதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவராக ஜெகதீஷ் வெற்றி பெற்றார்.துணைத் தலைவர் பதவிக்கு சுகுணா, சுதா ஆகியோர் போட்டியிட்டனர்.முன்னதாக, வெற்றி பெற்ற உறுப்பினர்களில், தி.மு.க.,வில், 6 பேரும், அ.தி.மு.க.,வில், 3 பேரும் ஆதரவுடன் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இதனால், தி.மு.க., ஆதரவாளர்களை, அ.தி.மு.க., வசம் இழுக்க பேரம் நடந்தது. மறைமுக ஓட்டெடுப்பின்போது, அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே இருந்து, தி.மு.க., நிர்வாகிகளை விடாமல் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.போலீசார் குவிக்கப்பட்ட பிறகு, இரு தரப்பினரும் வெளியேறினர். தொடர்ந்து கால தாமதமாக துவங்கிய, மறைமுக ஓட்டெடுப்பில், தலைவருடன் சேர்த்து, 6 ஓட்டுக்கள் பெற்று சுகுணா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X