பொது செய்தி

தமிழ்நாடு

முப்பெரும் விழா

Added : ஜன 13, 2020
Advertisement
 முப்பெரும் விழா

வத்தலக்குண்டு:திருநகரில் குடியிருப்போர் நலச்சங்க துவக்கம், கண்காணிப்பு கேமரா இயக்குதல், பொங்கல் விளையாட்டு என முப்பெரும் விழா நடந்தது.
சங்க தலைவர் மரியலுாயிஸ் சங்கப் பலகையை திறந்து வைத்தார். செயலாளர் நாதன் முன்னிலை வகித்தார். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றினார். நிலக்கோட்டை டி.எஸ்.பி., பாலகுமார் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி, துவக்கி வைத்தார். சமத்துவ பொங்கல் வைத்து பரிமாறிக் கொண்டனர். விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வேலன் வாழும் கலைக்கூடம் சார்பில் சிலம்பம், வாள், சுருள் சுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சிறுமி திவ்யதர்ஷினியின் பரதநாட்டியம் நடந்தது. பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X