பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து :விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Added : ஜன 13, 2020
Advertisement
 அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து :விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் சுற்றுகள் அடிப்படையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மடத்துக்குளம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில், நெல், கரும்பு, மக்காச்சோளம், மற்றும் பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால், உரிய நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை.கடந்த ஆண்டு செப்.,ல் சாகுபடிக்கு பாசன நீர் திறக்கப்பட்டது. பாசன நீரை பயன்படுத்தி, நாற்றங்கால் விடுதல் மற்றும் சில இடங்களில் மக்காச்சோளம் விதைத்தல் நடந்தது.
இதனைத்தொடர்ந்து நடவு உள்ளிட்ட பயிர்களின் பல்வேறு நிலை வளர்ச்சிக்கு தகுந்தபடி சீரான இடைவெளியில், குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை திறக்கப்பட்டது.தற்போது, நெல் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அறுவடைக்கு நெருங்கும் நிலையில் உள்ளன. இந்த மாத இறுதியில் நெல் அறுவடை தொடங்கும். இறுதிக்கட்ட பயிர்களின் வளர்ச்சிக்காகவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X