பொது செய்தி

தமிழ்நாடு

தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எட்டாக்கனி 'அம்மா ஸ்கூட்டர்'

Added : ஜன 13, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஒன்றியங்களில், பெண்களுக்கான ஸ்கூட்டர் மானிய திட்டத்தில், தாழ்த்தப்பட்டோருக்கான இலக்கை அடைய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான, பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்கும் திட்டம், தற்போதைய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பணிபுரியும் மற்றும் சுயதொழில் புரியும் பெண்களுக்கு உதவியாக, ஸ்கூட்டர் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மகளிர் திட்டம் மூலம், இம்மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நடப்பாண்டில், கோவை மாவட்டத்தில், ஐந்தாயிரம் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 149; தெற்கு ஒன்றியத்தில், 119 என மொத்தம், 268 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், 25 சதவீதம், தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், பொதுப்பிரிவு பெண்கள் மட்டுமே அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.ஆனால், தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வராததால், அப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்கில், 10 சதவீதம் கூட அடைய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.பொள்ளாச்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்டத்தை தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களிடம் சரிவர கொண்டு சேர்க்காததே, இலக்கை அடைய முடியாததற்கு காரணம்,' என்கின்றனர்.மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ஸ்கூட்டர் மானிய திட்டம் குறித்தும், அதை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்து, விண்ணப்பங்களை பெறுவதற்கும், உரிய பயிற்சியை வழங்க வேண்டும். நடப்பாண்டு இறுதிக்குள், இலக்கை முழுமையாக எட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X